வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 12 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்கு தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார்.
குமரி மற்றும் தென்தமிழக கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று குறிப்பிட்ட பாலசந்திரன், கடல் சீற்றம் அதிகரிக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.
அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும் எனவும் கூறினார்.
Discussion about this post