ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட பெண் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியா நாட்டில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதேபோல் குயின்ஸ்லாந்து நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ‘லாமிங்டன்’ எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டு போட்டி போட்டு கேக் சாப்பிட்டனர். இதில் கலந்துகொண்ட 60 வயது பெண்ணுக்கு திடீரென தொண்டையில் கேக் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்த செய்தியை கேட்ட போட்டியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்கள் கவலையடைந்தனர்.
Discussion about this post