சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.112 ரூபாய் அதிகரித்து ரூ.31,008 விற்பனை செய்யப்படுகிறது.
தினந்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலையானது கடந்த சில தினங்களில் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 69 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ஆயிரத்து 552 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 876 ரூபாய்க்கும், சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 51 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 300 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Discussion about this post