ஆந்திர சட்டப்பேரவையின் மேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குடிவாடா அமர்நாத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் பல புதிய திட்டங்கள் மற்றும் அதிரடி மாற்றங்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி செய்து வருகிறார். ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்குவதற்கான மசோதா சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு அதிரடியாக ஆந்திர சட்டப்பேரவையின் மேலவையைக் கலைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குடிவாடா அமர்நாத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post