புழல் மத்திய சிறையில் விசாரணை பிரிவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடையாள அணிவகுப்பு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும், சிறைக்கைதிகளின் அடையாள அணிவகுப்பு கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு 2 கோடியே 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன்படி, புழல் மத்திய சிறையில் விசாரணை பிரிவில், சுமார் 15 லட்சம் செலவில், புதிதாக அடையாள அணிவகுப்பு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சிறைத்துறை தலைவர் ஆபாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, அடையாள அணிவகுப்பு கட்டடத்தை திறந்து வைத்தனர்.
Discussion about this post