சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 2 முதல் 4 மீட்டர் வரை உயர்ந்து உள்ளதாகவும், மழை நீர் சேகரிப்பு திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் அடுத்த வாரத்தில் துவங்க உள்ளதாகவும், மாநகராட்சி சார்பில் கடைகளுக்கு மாதம் தோறும் வாடகைகள் வசூலிக்கப்படும் எனவும் கூறினார்.
சென்னை மாநகரில் 2 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளதாகவும், மேலும், 60 சதவீத வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டம் முடிந்துள்ளததாகவும் தெரிவித்த அவர், 40 சதவீத பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தெரிவித்தார்.
Discussion about this post