நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நல அறக்கட்டளை மற்றும் நியுஸ் ஜெ தொலைக்காட்சி இணைந்து நடத்திய இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 641 காளைகளும், 531 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெஹ்ராஜ் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப்போட்டி காலை 9 மணி அளவில் தொடங்கியது. அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் போட்டியை துவக்கி வைத்தனர். மிகவும் விருவிருப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் 12 மாடுகளைப் பிடித்த நாமக்கல் மாவட்டம் பண்ணாரப்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளை முதலிடம் பிடித்தது. ஜல்லிக்கட்டுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுரைக்குச் சென்று பயிற்சி பெற்று வந்ததாக இதில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள் தெரிவித்தனர்..
Discussion about this post