சிரியாவில் ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது, அரசு படைகளுக்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பெரும் பலம் பெற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிடித்தது. ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளும், குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் உள்நாட்டு போரில் களமிறங்கின. அங்கிருந்து படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு விரட்டி அடிக்கப்பட்டது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் விரட்டப்பட்டதால், சமீபகாலமாக அங்கு போர் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் இத்லீப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள 2 ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். 90 பயங்கரவாதிகள் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
Discussion about this post