அகமதாபாத் மும்பை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் தாமதமாக வந்ததால், அதில் பயணித்த 630 பணிகளுக்குத் தலா 100 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
ஆமதாபாத் முதல் மும்பை வரை ஜனவரி 17ம் தேதி முதல் ஐஆர்சிடிசி சார்பில் தேஜஸ் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தேஜஸ் அதிவிரைவு ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை ஆமதாபாத்தில் புறப்பட்ட ரயிலானது குறிப்பிட்ட நேரத்திலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது. இதையடுத்து அதில் பயணித்த 630 பயணிகளுக்கும் 100 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு 250 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Discussion about this post