நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அரசு சார்பில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 124 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் கடைக்கோடி தொண்டன் கூட பதவிக்கு வரமுடியும் என்றும், திமுவின் தலைவராக துரைமுருகனை ஸ்டாலின் அறிவிப்பாரா? என்றும் கேள்வியெழுப்பினார். 28-ம் தேதி திமுக அறிவித்துள்ள போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்ததே திமுகதான் என்றும், திருடர்களே திருடன் திருடன் என்று ஒடுவது போல் உள்ளது இந்தப் போராட்டம் என தெரிவித்தார்.
Discussion about this post