மனித முகத்தை ஒத்திருக்கும் ஆடு ஒன்றை கிராம மக்கள் கடவுளின் அவதாரம் என்று வணங்கி வருகின்றனர்..
ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோனியா கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ்ஜி பிரஜபாப் என்பதற்கு சொந்தமான ஆடு ஒன்று சமீபத்தில் குட்டிகளை ஈன்றுள்ளது.
அதில் ஒரு ஆட்டுக் குட்டி மட்டும் மனித முகத்தைப் போன்று பிறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மனித முகத்தை ஒத்த இருக்கும் இந்த ஆட்டுக்குட்டியை கடவுளின் அவதாரம் என்று வழிபடுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்..மேலும் சைக்கிளோ பியா என அழைக்கப்படும் ஒரு அரியவகை மரபனு குறைபாட்டால் இவ்வாறு நிகழ்ந்து இருக்கக்கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இதுபோன்ற அர்ஜென்டீனா நாட்டில் மனித முகத்தை போன்ற பிறந்த கன்றுக்குட்டி சில மணி சில மணி நேரத்திலேயே இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
Discussion about this post