தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 67 ஆயிரத்து 687 வாக்குச் சாவடிகளில் நடந்த இந்த முகாம்களில், பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய என 17 லட்சத்து ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதில் புதிதாக பெயர் சேர்க்க மட்டும் 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
அதுபோல, பெயர் நீக்கம் செய்ய 1 லட்சத்து 2 ஆயிரத்து 210 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 1 லட்சத்து 73 ஆயிரத்து 926 பேரும், முகவரி மாற்றம் செய்ய 1 லட்சத்து 8 ஆயிரத்து 548 பேர் என மொத்தம் 17 லட்சத்து ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவை பரிசீலிக்கப்பட்டு, பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தத் தகவலை, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Discussion about this post