சீனாவில் 15 வயது சிறுமியின் முகம் வயதான தோற்றத்தில் காட்சி அளித்ததால் அறுவை சிகிச்சை மூலம் அதனை மாற்றி உள்ளனர்..
சீனாவின் 12 வயது சியோ ஃபெங் என்ற சிறுமிக்கு மரபு நோய் ஒன்று இருந்து வந்தது.. இந்த மரபு வழி நோயால் 15 வயது சிறுமிக்கு வயதான முகம் காட்சியளித்தது.
இதனால் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் அக்கம்பக்கத்தினர் அனைவரும் சியோவை கேலி செய்துள்ளனர். இதனைக்கண்ட பள்ளி ஆசிரியர் சியோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்துள்ளார்..
இந்திய மதிப்பில் 51 லட்சம் ரூபாய் செலவில் சியோவின் முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மூலம் சியோவின் முகம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.. இந்த அறுவை சிகிச்சைக்கு உதவிய பள்ளி ஆசிரியரை அனைவரும் பாராட்டுகின்றனர்.
Discussion about this post