திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ செலவிற்காக நிலப்பத்திரத்தை கொடுத்து கடன்பெற்ற நிலையில், போலி பத்திரம் தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயல்வதாக திமுக நிர்வாகிகள் உட்பட 15 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள சூரிபாளையம் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் என்பவர், தனக்கு சொந்தமான 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலப்பத்திரத்தை கொடுத்து, தாயாரின் மருத்துவ செலவிற்காக 2009ம் ஆண்டு சந்திரசேகர் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு பத்திரத்தை கேட்ட சென்னியப்பனை, பத்திரத்தை தராமல் சந்திரசேகர் ஏமாற்றியதுடன் மிரட்டியும் வந்துள்ளார்.
திமுக நிவாகிகளுடன் சேர்ந்து நிலத்தை அபகரிக்க முயன்ற சந்திரசேகர் உள்ளிட்ட 15 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சென்னியப்பன் புகார் அளித்துள்ளார்.
Discussion about this post