சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 7 மாத ஆண்குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஜானி- ரந்தோஷ் தம்பதிக்கு, 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் தங்கி, பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களது 7 மாத குழந்தையை சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறி, பெண் ஒருவர் ஸ்கிரீன் டெஸ்ட் எடுப்பதற்காக, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து குழந்தையை அந்த பெண் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். குழந்தையை கடத்திய பெண் யார்? எதற்காக கடத்தினார் ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post