புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூர் கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். போட்டியில் புதுக்கோட்டை,திருச்சி,திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 610 காளைகள் பங்கேற்றன. வாடி வாசலலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 275 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார். ஜல்லிக்கட்டினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Discussion about this post