சென்னை மெரினா கடற்கரையில் உள்ள குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காணும் பொங்கல் என்பதால் சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். மக்கள் அதிகளவில் குவிந்ததால் மெரினா கடற்கரையில் குப்பைகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நவீன இயந்திரங்களை கொண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post