தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணவர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில், கரூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆப்பரேட்டர் அட்வான்ஸ்டு நெஷின் டூல்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை, கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ட்க்னீஷியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டங்கள் முதலைமைச்சர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேரிங் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டடம், திண்டுக்கல் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள டெக்னீசியன் பவர் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டத்தையும் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டூல் மற்றும் டை மேக்கர் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டடம் மற்றும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மெக்கானிக் ரெப்ரெஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷ்னிங் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டடம் மற்றும் 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டெக்னீசியன் டெக்ஸ்டைல் மெகட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக, வேளாண் சார்ந்த முக்கிய தகவல்கள் அடங்கிய 2019ஆம் ஆண்டிற்கான, வேளாண் புள்ளி விவரப் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதனை வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு பெற்றுக் கொண்டார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச்செயலாளர் சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்பு, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, வேளாண்த்துறை அமைச்சர் துரைக்கண்ணு சந்தித்தார். அப்போது, கர்நாடகாவில் நடைபெற்ற விழாவில், 2017-18 ஆம் ஆண்டில், தமிழ்நாடு எண்ணெய் வித்துக்களில் 10.382 மெட்ரிக் டன் உற்பத்தி அடைந்ததற்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருத்துக்கு 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
Discussion about this post