காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், தமிழக எல்லையான ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து 2வது நாளாக ஆயிரத்து 700 கன அடியாக நீடித்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையளவு குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து ஆயிரத்து 700 கன அடியாக நீடித்து வருகிறது. ஒகேனக்கல் வழியாக தருமபுரிக்கு நீர்வரத்து குறைந்த போதிலும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 158-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Discussion about this post