அசாம் மாநிலத்தின் திப்ருகரில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கிராம மக்கள் அடித்துக் கொன்று விருந்து வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
திப்ருகர் மாவட்டத்தில் திலிபரி கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று அடிக்கடி புகுந்து பொதுமக்களை தாக்கி வந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் புகாரளித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பொதுமக்கள் தாக்கி கொன்றதோடு அதை ஊருக்கே விருந்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுத்தையை அடித்து கொன்றதற்கு வன ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை தாக்கி கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post