தமிழகத்தில், மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்துக்கு, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் 24 பேர் பலியானார்கள். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயகாந்த், சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கிப் பலியானார். அதுபோல், வேலூர் மாவட்டம், பலவன்சாத்து கிராமத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மின்சாரம் தாக்கிப் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம், மேலராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பாம்பு கடித்துப் பலியானார். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கிப் பலியான 24 பேரின் குடும்பத்துக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post