2020ஆம் ஆண்டின் முதல் கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்று நிகழ உள்ள சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் சந்திர கிரகண நிகழ்வு, இந்த ஆண்டு மட்டும் 4 முறை நிகழ உள்ளது. இதில் முதல் கிரகணம் இன்று இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது. இன்று தெரிய உள்ள சந்திர கிரகணத்தில் பூமியின் வெளிப்புற நிழல் மட்டுமே சந்திரனில் விழும். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்கள் வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் கிரகணத்தை பார்க்கலாம் என வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டில் ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய நாட்களிலும் சந்திர கிரகணம் நிகழ்கிறது.
Discussion about this post