சென்னையில் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி சார்பில் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஐந்து நாள் விற்பனை கண்காட்சி தொடங்கியது.
சிட்பி எனப்படும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியுடன் இணைந்து தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சென்னை மயிலாப்பூரில் கைவினை கலைஞர்களின் விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சினை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்த்தி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இதற்காக 54 அரங்குகள் அமைக்கபட்டு அதில் கைவினை கலைஞர்கள், தொழில்முனைவோர் உருவாக்கிய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யபடுகிறது.
Discussion about this post