போகி பண்டிகையின்போது எரிக்கப்படும் பழைய பொருட்களால் உடல் நலத்திற்கும் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தைத்திருநாளுக்கு முன் தினம் தமிழகம் முழுவதும் அனைவராலும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வீணான பழைய பொருட்களை போகி பண்டிகையின் போது தீயிட்டு கொளுத்துவது மரபு.இப்படி தீயிட்டு கொளுத்துவதும் அதிலிருந்து வெளியேற்றப்படும் கரும் புகையில் உடல் உறுப்புகளுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுப் பொருட்கள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் பயன்படுத்திய பொருட்களை எரிக்கும்போது துணி, மரம் சார்ந்த பொருட்களே அதிகம்
அதிகம் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் கலந்த பொருட்களே அதிகம் பயன்படுத்துவதால் அதை தீயிட்டு கொளுத்துவதன் மூலம் கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, போன்ற நச்சுப்பொருட்கள் காற்றில் அதிகம் கலக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய நச்சு வாயுக்காளால் கண் எரிச்சல், சுவாசிக்கும் போது எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம், போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.
மேலும் போகிப் பண்டிகையை கொண்டாடுவது நமது பாரம்பரியம் என்றாலும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் பாரம்பரிய பொருட்கள் அல்ல. இன்றைய தலைமுறைகள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் கலந்து உருவாக்கப்பட்ட பொருட்கள் என்பதால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை இந்த பாரம்பரிய பண்டிகையின்போது தீயிட்டுக் கொளுத்துவதால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே
போகிப் பண்டிகையின்போது அதிகம் நச்சு தன்மையை ஏற்படுத்தும் பொருட்களை தீயிட்டு கொளுத்தாமல் பாதுகாப்பானது ஒரு போகி பண்டிகையை கொண்டாடுவோம்.
Discussion about this post