ஈரான் இராணுவ தளபதி சுலைமானி அமெரிக்க படைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறி வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரான் புரட்சிப் படை அறிவித்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்தார். ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், சர்வதேச நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சுலைமானி அமெரிக்க படைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார் எனக் குறிப்பிட்ட டிரம்ப், தான் ஆட்சியில் இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.
Discussion about this post