கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார். கோலார் தங்க சுரங்கத்தில் பல காலமாக இருந்து வந்த அடிமை முறையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் யாஷ் பிறந்த தினமான இன்று கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட உள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
Discussion about this post