ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தியதால் 4 வயது குழந்தையின் கண்பார்வை பறிபோன சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன் லேப்டாப் அவற்றின் வளர்ச்சிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.. அதேபோல் அவற்றின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.. பெரியவர்கள் இளைஞர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் ஸ்மார்ட் போன்களில் தற்போது அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தை திசை இருப்பதற்காகவும் அல்லது அவர்கள் வேறு ஒரு வேலை செய்யும் போது குழந்தைகள் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காகவும் அவர்களின் கையில் ஸ்மார்ட் போனை கொடுத்து விடுகின்றனர். எதிர்காலத்தில் வரும் ஆபத்தை எண்ணிப் பார்க்காமல் குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போன் கொடுக்கின்றனர்.
இதனால் குழந்தைகளின் கண்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்தவகையில் தாய்லாந்தை சேர்ந்த 4 வயது குழந்தை அதிகம் ஸ்மார்ட் போன் , ஐபேட் பயன்படுத்தி வந்தால் கண் பார்வை பறிபோயுள்ளது.
குழந்தையின் 2 வயது முதலே ஸ்மார்ட் போனைப் பயன்படுத்த பெற்றோர் அனுமதித்துள்ளனர். இதனால் தற்போது குழந்தையின் கரு விழியில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையை அணுகி உள்ளனர்.
அங்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தைக்கு 80 சதவீத பார்வையை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். மேலும் டிவி , ஸ்மார்ட் போன் , ஐபேட் , லேப்டாப், கணினி இது போன்ற பொருட்களை அதிகம் உபயோகிக்க கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்..
Discussion about this post