கடலூர் அருகே கரை ஒதுங்கிய பல லட்ச ரூபாய் மதிப்பிலான திமிலங்கத்தின் எச்சத்தை மீன்வளத் துறையினர் கைப்பற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய உயிரினமான திமிங்கிலத்தின் எச்சமானது, பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக விளங்குகிறது. தேவனாம்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கிய திமிலங்கத்தின் எச்சத்தைக் கண்ட சிலர், மீன்வளத் துறைக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்த 5 கிலோ 880 கிராம் எடைக் கொண்ட திமிலங்கத்தின் எச்சத்தை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு சுமார் 40லட்ச ரூபாய் வரை இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post