கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சீராக உள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆயிரத்து 800 கன அடியாக நீடித்து வருகிறது.
பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்தும், ஆயிரத்து 800 கன அடியாக நீடித்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், மெயின் அருவிக்கு செல்லக் கூடிய நடைபாதைகள், மின்கம்பங்கள், தொங்கு பாலம் போன்ற இடங்களில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகள் நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது 153-வது நாளாக நீடித்து வருகிறது.
Discussion about this post