ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதலமைச்சர், 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2018 வரை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், அப்போது 2 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறினார். மீண்டும் இந்த திட்டம் 2018 முதல் 2022 வரை நான்கு ஆண்டுகளுக்கு சிறப்பு அம்சங்களுடன் செயல்படுத்தப்படும் என்றார்.
ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தையருக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுக்குமா..? என்ற கேள்விக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Discussion about this post