சென்னையில் நடைபெற உள்ள 43-வது புத்தகக் கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்வாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 3 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், வருகிற 9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை 13 நாட்கள் சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, விழிப்புணர்வு நிகழ்வாக ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 3 ஆயிரம் மாணவர்கள் ஒன்றாக இணைந்து புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர். மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி துவக்கி வைத்தார். பின்னர், பாடப் புத்தகங்களைத் தாண்டி பொது அறிவு, வரலாறு, அறிவியல், தலைவர்களின் வரலாறு, பெரும் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
Discussion about this post