அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய, 5 அமைச்சர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் குழுவினர், சீர்மிகு அந்தஸ்து பெறுவது குறித்தும், 2 ஆக பிரிப்பது குறித்தும் ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post