விருத்தாசலம் அருகே என்.எல்.சி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரை குத்திய, ரவுடிக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன், என்.எல்.சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலாக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் இருந்த போது அங்கு வந்த மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த கஞ்சா மணி, அத்துமீறி காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது செல்வேந்திரன், அவனை பிடிக்க முயற்சித்துள்ளார். கஞ்சா மணி கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், குத்தி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட செல்வேந்திரன் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கஞ்சா மணியைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், கஞ்சா மணி பாதுகாப்பு படை வீரரை கத்தியை காட்டி மிரட்டும் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Discussion about this post