கென்யாவின் லாமு பகுதியில் கென்யா அமெரிக்க கூட்டுப் படையினரைக் குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியாகினர்.
கடலோரப் பகுதியான லாமுவின் மாண்டா விமானத் தளத்தை குறி வைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் கென்ய அமெரிக்க கூட்டுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு சோமாலியாவைச் சேர்ந்த அல் ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களது அமைப்பினர் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஈரான் அமெரிக்க மோதல் முற்றி வரும் சூழலில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Discussion about this post