சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பொலவபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் அத்திக்கடவு அவிநாசி திட்டம் பற்றி ஐம்பதாண்டுகளுக்கு மேல் பேசப்பட்டு வந்தாலும், அதை நிறைவேற்றிய வரலாறு அதிமுக அரசிற்கு மட்டுமே எனத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திட்டம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post