பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா யாத்ரீகர்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தார். அவரது நினைவாக, அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர், குருத்வாரா மீதும், சீக்கிய யாத்ரீகர்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து அகாலிதளம் மற்றும் சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவினர் இணைந்து டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post