அமெரிக்காவில் மருத்துவர்கள் கூட்டமைப்பின் எச்சரிக்கையை அடுத்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது..
அமெரிக்காவில் இ-சிகரெட்டை புகைக்கும் பழக்கத்தால் ஏற்பட்ட நோய் காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டாயிரத்து 500-க்கும் அதிகமானோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இ-சிகரெட்டை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும், இளைஞர்கள் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பச்சை கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட் விற்பனைக்கு தடை இல்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post