ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது..
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிகள், ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தொண்ணூறாயிரத்துக்கு மேற்பட்ட பதவிகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை 315 மையங்களில் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர், பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்… வாக்குகளை எண்ணும் பணி இன்றும் தொடர்கிறது.
Discussion about this post