புத்தாண்டு கொண்டாட்டங்களால் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆங்கில புத்தாண்டு நேற்று கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக் கட்டின. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய பகுதிகளான இந்தியா கேட், கன்னாட் சர்க்கிள், பாராபுல்லா மேம்பாலம் ஆகிய இடங்களில் பல மைல் தூரம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டவர்கள் டுவிட்டர் மூலம், டெல்லி போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இருந்தாலும் பல மணிநேரத்திற்கு பின்னரே போக்குவரத்து சீரானது.
Discussion about this post