சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி நடை திறக்கப்பட்டு உள்ளது.
வருகிற 15-ந்தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அப்போது சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும்.
இதனால் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வருகிற 5-ந்தேதி குடியரசு தலைவர் கொச்சிக்கு வருகிறார். மறுநாள் திங்கட்கிழமை காலையில் ராம்நாத் கோவிந்த் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கிறார்.
இவரது வருகையை ஒட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன..
இதற்கு முன்பு 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி அப்போதைய குடியரசு தலைவர் வி.வி.கிரி சபரிமலை வந்து தரிசித்தார். . சபரிமலை வரும் 2-வது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆவார்.
Discussion about this post