Flipkart, Amazon க்கு போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் ஆன்லைன் விற்பனையால் சிறிய, பெரிய நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு விற்பனையை தொடங்கின. ஏராளமான கலெக்ஷன்கள், ஒரே ஒடத்தில் அனைத்து பொருட்களும் கிடைப்பதால் மக்களும் ஆன்லைன் வணிகத்தை விரும்புகின்றனர். பல நிறுவனங்கள் இருந்தாலும் நம் நினைவுக்கு உடனே வருவது Flipkart, Amazon தான்.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் “ஜியோமார்ட்” என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளது. இது Flipkart, Amazon நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, முதற்கட்டமாக மும்பையில் தொடங்கப்பட்டுள்ள இந்த விற்பனை விரைவில் இந்தியா முழுமைக்கும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ரீடெயில் சார்பில் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த சேவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மளிகை பொருட்களை வாங்க முடியும் எனவும், சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் என அனைவரையும் இதில் பங்குகொள்ள வைக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post