ரயில்வே பயணிகள் கட்டணம் சாதாரண ரயில்களில் கிலோ மீட்டருக்கு ஒரு காசும், மெயில், விரைவு ரயில்களில் கிலோ மீட்டருக்கு 2 காசுகளும், ஏசி வகுப்புகளுக்குக் கிலோ மீட்டருக்கு 4 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணிகள் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சாதாரண ரயில்களில் கிலோமீட்டருக்கு ஒரு காசு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெயில், விரைவு ரயில்களில் கிலோ மீட்டருக்கு 2 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து ஏசி வகுப்புகளுக்குமான கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
ராஜதானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், அம்சாபர், அந்தியோதயா, கரீப் ரத், ஜன சதாப்தி, சுவிதா மற்றும் சிறப்பு ரயில்களுக்கு இந்தக் கட்டண உயர்வு உண்டு. கடைசியாக 2014 – 2015 நிதியாண்டில் ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் கட்டணம் ஓரளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் கட்டணம், சீசன் டிக்கெட் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. முன்பதிவுக் கட்டணம், அதிவிரைவுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை உயர்த்தப்படவில்லை. ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ள பயணச்சீட்டுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post