ஃபாஸ்டேக் மூலம் 66 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருப்பதை தவிர்க்கவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை கையாளவும் ஃபாஸ்டேக் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களில் மட்டும், ஃபாஸ்டேக் மூலம் 52 கோடி ரூபாய் வரை வசூல் கிடைத்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் ஃபாஸ்டேக் வில்லைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வில்லைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் முறை மூலம் 66 சதவீதம் வரை வருவாய் அதிகரித்துள்ளதாகவும் மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post