ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்.எம்.எஸ் சேவை வழங்கப்பட இருக்கிறது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, லேண்ட லைன், செல்போன் மற்றும் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டது. தற்போது, இரண்டு யூனியன் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் திரும்பி உள்ள நிலையில் தடை செய்யப்பட்ட வசதிகள் மீண்டும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட செல்போன் எஸ்.எம்.எஸ் வசதி மீண்டும் இன்று முதல் துவங்கி உள்ளது.
இதேபோல் அரசு மருத்துவமனைகளில் மட்டும் இணைய வசதிகள் இன்று முதல் துவங்கி உள்ளது. கடந்த நான்கரை மாதங்களுக்கு பிறகு செல்போன் எஸ்.எம்.எஸ் சேவை இன்று முதல் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post