வாக்கு எண்ணிக்கையை அதிமுக முகவர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, அதிமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு காலை 6 மணிக்கே செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்களில் சீல் முறையாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளர்களும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளது என்பதை எழுதி வைத்துக் கொண்டு, தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும் என அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் திமுக தில்லு முல்லு வேலைகளில் ஈடுபடுகிறதா என்பதை விழிப்போடு கண்காணிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாவட்ட கழகச் செயலாளர்கள் இதில் தனி கவனம் செலுத்தி, அனைத்துப் பணிகளும் முறையாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post