கோவையில், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடாக மாநகர காவல்துறை சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2020ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் கோவை மாநகர காவல்துறையினர் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதன்படி, முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என முக்கிய இடங்களாக பிரிக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பல்வேறு முக்கியமான பகுதிகளில் 44 இருசக்கர வாகனங்களிலும், 26 நான்கு சக்க வாகனங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்வர். காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள், 400 மாநகர ஆயுதப்படை காவலர்கள், 80 சிறப்பு காவல் படை காவலர்கள், 150 ஊர் காவல்படையினர் உட்பட மொத்தம் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post