ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மகிழ்ச்சியான நன்னாளில், ஒளிமயமான, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வுகளை நாம் அனைவரும் வளர்ந்தோங்கச் செய்து வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை பெறுவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும் புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என்று இந்த புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களை வாழ்த்துவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post