ஆங்கில புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சென்னையில் 368 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ள நிலையில், விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்பதில் காவல்துறை உறுதியாக உள்ளது. அதன்படி சென்னை காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, வாலாஜா சாலை, காந்தி சிலை, அடையார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுள்ளது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி சென்னை முழுவதும் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இன்று இரவு 9 மணி முதல் சென்னையின் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, தி.நகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர் உள்ளிட்ட 368 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
Discussion about this post