இந்திய அணியின் கேப்டனாக தோனி இருக்கும் போது தாங்கள் சரியாக விளையாடுவதற்கு என்ன காரணம் என்பதை அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமான ஒருவராக திகழ்பவர் இஷாந்த் சர்மா. தற்சமயம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இஷாந்த் சர்மா அறிமுகமான ஆரம்ப காலங்களில் அதிரடி பேட்ஸ்மேன்களையே தனது பந்து வீச்சினால் மிரள வைத்தவர்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தோனி கேப்டனாக இருந்தபோது தாங்கள் சரியாக விளையாடததற்கு என்ன காரணம் என்பதை கூறியுள்ளார். அதன்படி தோனி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் இருந்ததாகவும், அதனால் அனைவரும் சுழற்சி முறையில் பயன்படுத்தப் பட்டதால் தங்களால் ஒருங்கிணைந்து விளையாட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுவே அப்போது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது அதற்கு காரணமாக அமைந்தது என்றும் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.
அதேசமயம் விராட் கோலி கேப்டனாக இருக்கும் இந்த காலகட்டத்தில் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்த அளவில் இருப்பதால் தங்களால் ஒருங்கிணைந்து விளையாட முடிவதாகவும், தற்போதைய இந்திய அணியின் பந்துவீச்சு முந்தைய காலகட்டத்தை விட சிறப்பாக இருப்பதாகவும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
Discussion about this post