மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்ததால், காவல்துறையினருக்கும் போரட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் வசித்து வரும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்கள எழுப்பினர்.
Discussion about this post